ஆட்டத்தை ஆரம்பித்தது பாஜக - துத்துக்குடியில் 25 அதிமுகவினர் கட்சி மாறினர் - 4kTamil.com

ஆட்டத்தை ஆரம்பித்தது பாஜக - துத்துக்குடியில் 25 அதிமுகவினர் கட்சி மாறினர்




முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை ஒட்டி அதிமுகவில் எழுந்துள்ள பிரச்சனைகள் ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் பாஜக தனது முயற்சியை தூத்துக்குடியில் இருந்து துவக்கி உள்ளது. அதிமுகவில் சசிகலா தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தியால் 25 அதிமுகவினர் பாஜகவுக்கு தாவி உள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அதன் பின்னர் கட்சி ஆட்சி இரண்டுக்கும் யார் தலைமை என்ற பிரச்சனை எழுந்தது. ஆட்சியில் முதல்வராக ஓபிஎஸ் தொடருவார் என முடிவெடுக்கப்பட்டது.

 கட்சி தலைமைக்கு யார் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில் கட்சித்தலைமை சசிகலா ஏற்றுகொள்ள வேண்டும் அதிமுகவின் அனைத்து அமைச்சர்கள் கட்சிநிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இதை சசிகலாவும் ஏற்று இரண்டு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
ஆனால் மறுபுறம் சசிகலாவுக்கு எதிராக வலைதளங்களில் , வாட்ஸ் அப்களில் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

 பொதுவாக பொதுமக்கள் சசிகலாவை ஏற்றுகொள்ளும் மன நிலையில் இல்லை. இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று திமுக கூறியுள்ளது. மறுபுறம் பாஜக இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தமிழகத்தில் காலூன்ற துடிக்கிறது.

 எங்கெல்லாம் அதிருப்தி நிலவுகிறதோ அங்கு ஆட்களை வளைக்கும் காரியத்தில் இறங்கி உள்ளனர். முதல் கட்டமாக தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்த அதிமுகவின் அதிருப்தியாளர்கள் 25 பேர் பாஜாகவில் இணைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் இந்த இணைப்பு நடந்துள்ளது.

Recent Posts View More >>

Comedy

Mystery